Skin Diseases
தோல் சார்ந்த நோய்கள் – Skin Diseases
நமது உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பாக தோல் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு அடையாளமாக உள்ளது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தோலோடு தொடர்புடையவையாக உள்ளன.உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பு சில நேரங்களில் சருமத்தை பாதிக்கிறது. கடுமையான நோய்களின் அறிகுறிகளை காட்டும் சில விசித்திரமான சரும பிரச்சனைகளை இப்போது பார்ப்போம்.
நீரிழிவு பிரச்சினை:
இப்படிப்பட்ட தோல் வளர்ச்சிகள் சிலருக்கு இயல்பானவை. ஆனால் பல தோல் வளர்ச்சிகள் இரண்டாம் வகை நீரிழிவு நோயை குறிப்பதாக உள்ளன.தோல் வளர்சியை தூண்டுதல் இன்சுலின் நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாக உள்ளன. மேலும் அதிகரித்த தாகம், மெதுவாக சரியாகும் காயங்கள் மற்றும் அதிக பசி ஆகியவை ஒரு சேர இருக்கும் போது அது நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது.
முகப்பரு:
வயது வந்தவர்களுக்கு முகப்பரு என்பது பொதுவாக வர கூடியதுதான். ஆனால் புதிதாக இந்த வளர்ச்சி ஏற்படும்போது இதில் கவனம் செலுத்துங்கள். இது ஒரு கடுமையான நோயின் அறிகுறியாக இருக்கலாம். முகப்பரு போன்ற தோல் மாற்றங்கள் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு பெண்ணின் உடலில் ஆண்களுக்கு அதிகப்படியாக உற்பத்தியாகும் ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் உற்பத்தியாகும் போது பெரும்பாலும் முகப்பரு ஏற்படுகிறது.
வித்தியாசமான சொறி ஏற்படுதல்:
உங்கள் பேண்டில் உள்ள புதிய சலவை கட்டி அல்லது உலோக பொத்தான்கள் கூட சொறி ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன. சில நேரங்களில் அது உண்ணிகளின் கடியால் ஏற்பட்டிருக்கலாம். இந்த சொறிகள் மணிக்கட்டு, முன் கைகள் மற்றும் கணுக்கால் ஆகியவற்றில் இருக்கும்.
இந்த இடங்களில் ராக்கி மவுண்டன் ஸ்பாட் என்னும் காய்ச்சலுக்கு தொடர்புடைய தோல் வெடிப்புகள் ஏர்படுகின்றனர். எனவே இதை குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
இரண்டாம் வகை சொறி:
ஒரு புதிய மருந்தை எடுத்துக்கொள்வது எப்போதும் சில எதிர் வினைகளை கொண்டுள்ளது. இதனால் இரண்டாம் வகை சொறி ஏற்படுகிறது. இது டிரெஸ் எனப்படும் ஒவ்வாமைக்கான நோய் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இந்த சொறியானது கல்லீரல், இதயம் மற்றும் நுறையீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். மேலும் இந்த சொறியானது இரண்டு முதல் எட்டு வாரங்கள் வரை இருக்கும். இதனுடன் சேர்ந்து உங்களுக்கு காய்ச்சல் அல்லது நிணநீர் வீக்கம் இருந்தால் கண்டிப்பாக இந்த சொறியை கவனிக்கவும்.
நமைச்சல் அதிகமாக இருத்தல்:
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் குறிப்பாக குளிர்கால மாதங்களில் நீங்கள் அரிப்பை உணரலாம். இது பொதுவாக குளிர்காலத்தில் ஏற்பட கூடிய விஷயம் தான். ஆனால் அதற்கு நல்ல மாய்ஸ்சரைசர் நிவாரணம் அளிக்காத போது இது கடுமையான நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற சில புற்றுநோய்களாலும் கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பினாலும் இந்த அரிப்பு ஏற்படலாம். உங்கள் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டால் அது கடுமையான அறிகுறியாகும்.
முகத்தில் புதிய பருக்கள்:
சில நேரங்களில் இது தோல் புற்றுநோயின் வீரியம் மிக்க வடிவமாக இருக்க வாய்ப்புள்ளது. இது வளர்ந்துக்கொண்டே இருக்கும். இதன் அளவு, வடிவம், மற்றும் நிறம் போன்றவற்றில் மாற்றம் ஏற்படும்.
சிவப்பு புடைப்புகள்:
குடல் மற்றும் தோல் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை என்றாலும் அழற்சி குடல் நோய் போன்ற நிலைகள் சில நேரங்களில் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உங்கள் கால்களில் வலி மிகுந்த சிவப்பு முடிச்சுகள் தோன்றக்கூடும். அவை தோலின் மேற்பரப்பில் ஆழமான உணர்ச்சியை ஏற்படுத்தும்.
அதிகமான தோல் வியர்வை:
வியர்வை வராத ஒரு இடத்தில் இருக்கும் போதும் அதிகமாக வியர்க்கிறது என்றால் அது தைராடின் அறிகுறியாக இருக்கலாம். ஹைபர் தைராடிசம் உள்ளவர்களில் அவர்களின் வளர்சிதை மாற்றம் புதுப்பிக்கப்படுகிறது.
இதனால் எடை இழப்பு, தூங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் அதிகமான வியர்வை வெளியேற்றமும் இருக்கும்.
தோலின் கீழ் மஞ்சள் புடைப்புகள் ஏற்படுகின்றன:
மூட்டுகள், கைகள், கால்கள் ஆகிய பகுதிகளில் மஞ்சள் புடைப்புகள் ஏற்படுவது சருமத்தின் கீழ் கொழுப்பை கட்டியெழுப்ப கூடும். சாந்தோமாஸ் என அழைக்கப்படும் இந்த புடைப்புகள் உங்கள் உடலில் கொழுப்புகள் மற்றும் பிற இரத்த கொழுப்புகள் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
மேலும் இவை நீரிழிவு நோய், கணைய அழற்சி மற்றும் சில புற்றுநோய்களை ஏற்படுத்தும் நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். தோல் பிரச்சனைகள் என்பது மிகவும் கடுமையான நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.