Hair fall
முடி உதிர்தல் – Hair fall
ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் முடி உதிர்தல் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். முடி உதிர்வு பெரும்பாலும் மரபணு சிக்கல் மற்றும் தற்போதைய சூழலில் சோர்வு காரணமாகவும் ஏற்படுகிறது. தற்பொழுது, பெரும்பான்மையான மக்கள் அதிக மனச்சோர்வு நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர், இதன் தாக்கத்தினால் விரைவில் முடி நரைத்தல் , முடி உதிர்தல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன. உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததாலும் முடி உதிர்தல் சிக்கல் எழுகிறது. இன்றையப் பதிவில் முடி உதிர்தல் பிரச்சினை பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவோம்.
முடி உதிர்தல் பிரச்சினை என்றால் என்ன?
முடி உதிர்தல் ஆங்கிலத்தில் hair fall என்றழைக்கப்படுகிறது. உணவில், முடி மற்றும் கூந்தலின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் சத்துக்களின் குறைபாடுகளே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதிக ரசாயனங்கள் கொண்டு முடியின் நிறங்களை மாற்றுதல் காரணமாக, முடி பலவீனம் அடைகிறது மற்றும் முடி உதிர தொடங்குகிறது. ஈரமான முடியை உலர வைக்க கருவிகளைப் பயன்படுத்தி உலரவைப்பதும் முடி உதிர்வதற்கு காரணமாக அமைகிறது.
முடி உதிர்தலுக்கான காரணங்கள் யாவை?
- தற்பொழுது முடி உதிர்தல் பிரச்சினை மனிதர்களில் மிகவும் பரவலாக உள்ளது.
- சிலருக்கு தலைமுறை தலைமுறையாக முடி உதிர்தல் பிரச்சினை உள்ளது.
- ஹார்மோன்களின் மாற்றத்தால் முடி உதிர்தல் ஏற்படுகின்றது. தொற்று நோய் காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படுகிறது.
- கீல்வாதம் (Arthritis) நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிரத் தொடங்குகிறது.
- உணவில் இரும்புச்சத்து மற்றும் புரதத்தை குறைவாகப் எடுத்துக்கொள்வதினால் முடி பலவீனம் அடைகிறது.
- பெரும்பாலும், ஹார்மோன் மாற்றங்களே முடி உதிர்தலுக்கான முக்கிய காரணமாகும்.
முடி உதிர்தலின் அறிகுறிகள் யாவை?
- கூந்தல் பலவீனம் அடைதல்.
- முடி உடைதல்.
- உடல் முழுவதும் உள்ள முடிகள் குறைதல்.
- வட்டத் திட்டு வழுக்கை.