Diabetes
நீரிழிவு நோய் – Diabetes
ஒரு கார்போஹைட்ரேட்டை சாப்பிடும் போது உடல் அதை குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையாக மாற்றி இரத்த ஓட்டத்திற்கு அனுப்புகிறது. கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது இரத்தத்திலிருந்து குளுக்கோஸை உயிர் அணுக்களுக்கு நகர்த்த உதவுகிறது. இது ஆற்றலுக்காக பயன்படுகிறது.
இந்த குளுக்கோஸ் இரத்தத்தில் அதிகப்படியாகக் காணப்படும் போது உயர் இரத்த சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது.
வகைகள்:
ப்ரீடயாபட்டீஸ்:
இரத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து காணப்படும். ஆனால் மருத்துவரால் இதை கணிக்க இயலாது.
வகை 1 நீரிழிவு நோய்:
வகை 1 நீரிழிவு நோயை இன்சுலின் சார்ந்த நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறுவயதில் தொடங்கும் நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது.
வகை 2 நீரிழிவு நோய்:
இந்த வகை இன்சுலின் அல்லாத சார்புடைய (அ) வயது வந்தோருக்கான நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளில் சுமார் 90% வகை 2 ஐக் கொண்டு உள்ளனர்.
கர்ப்ப கால நீரிழிவு நோய்:
கர்ப்பக்கால நீரிழிவு தாயை விட குழந்தைக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் அசாதாரண எடை அதிகரிப்பு, பிறக்கும் போதே சுவாசிப்பதில் சிக்கல், அல்லது உடல் பருமன் போன்ற ஆபத்துகள் இருக்கலாம்.
அறிகுறிகள்:
பொதுவான அறிகுறிகள்:
அதிகரித்த பசி
அதிகரித்த தாகம்
எடை இழப்பு
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
மங்களான பார்வை
தீவிர சோர்வு
குணமடையாத புண்கள்
ஆண்களில் அறிகுறிகள்:
குறைவான பாலியல் இயக்கம்
விறைப்புத்தன்மையின்மை
குறைவான தசை வலிமை
பெண்களில் அறிகுறிகள்:
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்
ஈஸ்ட் நோய்த் தொற்றுகள்
அரிப்பு
வகை 1 நீரிழிவு:
தீவிர பசி
அதிகரித்த தாகம்
தற்செயலாக எடை இழப்பு
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
மங்களான பார்வை
சோர்வு
வகை 2 நீரிழிவு:
அதிகரித்த பசி
அதிகரித்த தாகம்
அதிகரித்த சிறுநீர் கழித்தல்
விரைவில் குணமடையாத புண்கள்.
கர்ப்பக்கால நீரிழிவு:
அரிதான சந்தர்ப்பங்களில் கர்ப்பக்கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் அதிகரித்த தாகம் (அ) சிறுநீர் கழிப்பதை அனுபவிப்பர்.
நீரிழிவு ஆபத்து காரணிகள்:
வகை 1 நீரிழிவு:
மரபணுக்கள் வாயிலாக டைப் 1 நீரிழிவு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வகை 2 நீரிழிவு:
அதிக எடை
45 வயதிற்கு மேற்பட்டவர்கள்
கர்ப்பக்கால நீரிழிவு
உயர் இரத்த அழுத்தம்
அதிக கொழுப்பு
கர்ப்க்கால நீரிழிவு:
அதிக எடை
25 வயதிற்கு மேற்ப்பட்டவர்
வகை 2 நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு
பாலிஸிஸ்டிக் கருப்பை நோய்க்குறி.
சிக்கல்கள்:
நீரிழிவு வகை 1 & 2:
இதய நோய்
மாரடைப்பு
பக்கவாதம்
பார்வை இழப்பு
காது கேளாமை
நரம்பியல்
நெஃப்ரோபதி
குணமடையாத நோய்த் தொற்றுகள்
மனச்சோர்வு
கர்ப்பக்கால நீரிழிவு:
குழந்தைக்கு
அகால பிறப்பு
பிறக்கும் போது அதிகரித்த எடை
குறை இரத்த சர்க்கரை
மஞ்சள் காமாலை
தாய்க்கு
பிரசவம் – அறுவை சிகிச்சை
ப்ரீஎக்ளாம்ப்சியா.