Dr Arun Chinniah has been working for more than 15 years to being proper paramedical divisions and he has brought Siddha Dietotherapy as a paramedical division wherein the recommendation of Padhartha Guna Sindhamani of great Siddha Saints. He has propagated Siddha foodology through the numerous television programs and has written 20 books specific to this subject. His books have been accepted by Central Government approved Bharat Sevak Samaj as a Syllabus for the course diploma in siddha dietotherapy. Thus he has paved the way for lakhs and lakhs of future generations to take up the paramedical wing of Siddha treatment Dietotherapy as their career.
Dr Arun Chinniah is an expert in Siddha treatment and Naturopathy. He has cured lakhs and lakhs of patients who were affected by chronic diseases and reverted their life back to happiness and well being. The below list of diseases are treated in his hospital.
Arthritis
ஆர்த்தரைட்டிஸ்
ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள் ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள் . ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுகள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறியப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள்:
- மூட்டுக்களில் நீர்கோர்த்தல்
- மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து , வேலைப்பழு காரணமாக
- உடல் சோர்ந்து போதல் (வயது காரணமாக)
- உடல் சோர்ந்து போதல்
- உடலில் நோய் எதிர்பு சக்தி குறைவதால் ஏற்படலாம்.
- நோய்த் தொற்று
- கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்பர்
ஆர்த்தரைட்டிஸ் பற்றிய ஆயுர்வேதத்தின் கொள்கை:
மூட்டுக்களின் , இயல்பான தடையில்லா அசைவுகளில் மூன்று தோஷங்களுமே முக்கிய பங்கு வகிக்கின்றன .
வாத தோஷத்தால் ஆர்த்தரைட்டிஸ் வரும் போது காணப்படும் அறிகுறிகள்:
- கடுமையான வலி
- வீக்கம்
- அசைவின் போது வலி
- குளிர் காலங்களில் வலி அதிகமாகும்
- வெயில் காலத்தில் வலி குறையும்
- அதிக கோபம்
- பயம்
- சூடான , கசப்பான சுவையுள்ள உணவுகள்
- குளிர்ச்சியான உணவுகள்
- பொரித்த உணவுகள் , பழைய உணவுகள் இவற்றால் வலி அதிகமாகும்.
பித்தம் அதிகமாகும் போது ஏற்படும் அறிகுறிகள்:
- வலி மிகுந்து எரிவது போன்று இருக்கும் வெதுவெதுப்புத் தன்மை இருக்கும்.
- கடுமையான நீர் கோர்த்து வீங்கும்.
- வெந்து காணப்படும்
- இயக்கமே குறையும்
- மதிய வேளைகளில் வலி அதிகரித்து மாலையில் குறையும்.
- வெயில் காலம் , இலையுதிர் காலத்தில் வலி அதிகமாகும்.
- குளிரில் வலி குறையும்
- புளிப்பு, உப்புசுவை பொருட்கள் சூடான பொருட்கள் , பொரித்த மசாலா உணவுகள் வலியை அதிகரிக்கும்,.
கபம் அதிகமாவதால் ஏற்படும் அறிகுறிகள்:
- அதிக எடை கூடி இருப்பதாக உணர்தல்
- ஈரப்பசை அதிகமாக இருப்பதாகத் தோன்றல்
- அதிகாலையில் வலி அதிகரித்தல்
- இளவேனில் காலங்களில் வலி அதிகரித்தல்
- புளிப்பு, இனிப்பு, உப்புச் சுவைகள் வலியை அதிகரிக்கும்.
- குளிர்ச்சியான , அதிகம் எண்ணெய் பொருட்கள் , பழைய உணவுகள் வலியை அதிகமாக்கும்.
- மன அழுத்தம் காரணமாக வலி அதிகமாதல்.
- உடல் அசைவுகள் குறைதல்
- மூட்டுக்களில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படும்
- வேலை மற்றும் இயக்கம் குறைவதால் வலி அதிகமாதல்.
ஆர்த்தரைட்டிஸ் வகைகள்:
- ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம்.
- ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி
- சொரியாடிக் ஆர்த்தரைட்டிஸ்- தோல் நோயுடன் சேர்ந்த வாத நோய்
- கவுட்- யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி , அதனால் வலி வரல்.
- செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் – அடிபடுவதால் ஏற்படுவது.